பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகும் ஜோடியாக சுற்றிய தீபிகா-சரவணன் இடையில் இப்படியொரு பிரச்சனையா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
கடந்த 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 5 ஆண்டுகள் முதல் சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. அதே வேகத்தில் 2வது சீசன் அப்பா-மகன்கள் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் பழனிவேல் தனியாக கடை திறந்த பிரச்சனை தான் போய்க் கொண்டிருக்கிறது.

முதல் பாகம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் நடித்த எல்லா நடிகர்களுமே ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
அப்படி இந்த தொடரில் கடைசி ஜோடியாக கொண்டாடப்பட்டவர்கள் தான் தீபிகா-சரவணன்.
இவர்கள் சீரியலில் ஜஸ்வர்யா-கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். சீரியல் முடிந்த பிறகும் இவர்கள் ஒன்றாக பாடல்கள் நடிப்பது, வெளியே செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என ஒன்றாக சுற்றி வந்தனர்.

இதனால் இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற பேச்சு கூட வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தொகுப்பாளினியும், நடிகையுமான தீபிகா ஒரு பேட்டியில், சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு இல்லை, அவர் வேறொரு வழியில் பயணிக்கிறார்.
ஒன்றாக இருக்கும் போது ஒரு விஷயம் செய்ய முடியவில்லை என்றால் தனியாக செல்வது நல்லது. அவர் அவரது பயணத்தை பார்க்கிறார், நான் எனது வேலையை செய்கிறேன். ஒன்றாக இருந்து பிரச்சனையில் இருப்பதை விட தள்ளி விடுவது சரி என பேசியுள்ளார்.