பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க வருவது குறித்து தீபிகா எமோஷ்னல் பதிவு- என்ன கூறுகிறார் பாருங்க
நடிகை தீபிகா
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தீபிகா. இவர் மேக்கப் போடுவதால் முகத்தில் நிறைய பருக்கள் வந்ததால் தொடரில் இருந்து அவர் வெளியேறிவிட்டார்.
சீரியல் குழுவினர் முகத்தை சரி செய்ய வாய்ப்பு கொடுத்தும் தன்னால் முடியவில்லை எனவே வெளியேறிவிட்டேன் என அவரே கூறியிருந்தார்.
சீரியலில் இருந்து வெளியேறிய பின் அவர் யூடியூப் பக்கம் தொடங்கி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
மீண்டும் ரீ-என்ட்ரி
இந்த நிலையில் தான் தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக நடிக்க வந்துள்ளார்.
மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க வருவது சந்தோஷமான விஷயம். இதுநாள் வரை எனக்கு ஆதரவு தந்தவர்கள் இனிமேலும் எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என எமோஷ்னலாக பதிவு செய்துள்ளார்.
குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?- முதன்முறையாக மணிமேகலை பதில்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
