செம கியூட்டாக இருக்கும் இந்த 4 சீரியல் நடிகைகள் யார் யார் தெரிகிறதா?- ஒரே தொடரில் நடிக்கிறார்கள்
சிறுவயது போட்டோஸ்
கொரோனா காலத்தில் சமூக வலைதளங்களில் நிறைய விஷயங்கள் டிரெண்ட் ஆனது. அந்த நேரத்தில் தான் ரசிகர்கள் மற்ற மொழி படங்களை அதிகம் காண ஆரம்பித்தார்கள், சரியாக அங்கீகரிக்கப்படாத கலைஞர்கள் கூட கொண்டாடப்பட்டார்கள்.
அதேபோல் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் வைரலாகி வந்தன.
இப்போதும் அந்த டிரெண்ட் தொடர்ந்துகொண்டு தான் வருகிறது.
சீரியல் நடிகைகள்
தற்போது இன்ஸ்டா பக்கத்தில் 4 சீரியல் நடிகைகளின் சிறுவயது புகைப்படம் டிரண்ட் ஆகிறது. அவர்கள் யார் என்று சிலர் கண்டுபிடித்தாலும் பலருக்கு யார் என்றே தெரியவில்லை.
அவர்கள் வேறுயாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் வீட்டிப் பெண்கள் தான். கனிஹா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா மற்றும் மதுமிதா.