பிக் பாஸ் 9 வைல்ட் கார்டு என்ட்ரி.. புதிதாக களமிறங்கும் இரண்டு சீரியல் பிரபலங்கள்
பிக் பாஸ் 9 வைல்டு கார்டு
கடந்த 5ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 9 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், நந்தினி என்பவர் முதல் வாரமே தானாக முன்வந்து வீட்டிலிருந்து வெளியேறினார்.

இதன்பின், அதே வாரம் குறைவான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து சென்ற வாரம் அப்சரா எலிமினேஷன் செய்யப்பட்டார்.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் இரண்டு பேர் புதிதாக வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல் பிரபலங்கள்
பாக்கிய லட்சுமி சீரியலில் நடித்த நடிகை திவ்யா கணேசன் மற்றும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகி, தற்போது கெட்டி மேளம் சீரியலில் நடித்து வரும் சிபு சூர்யன் ஆகிய இருவரும்தான் வைல்டு கார்டு போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் வீட்டிற்குள் வந்த பின், ஆட்டம் எப்படி மாறப்போகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
