பிரபல சீரியல் ஜோடி அன்வர்-சமீராவிற்கு 2வது குழந்தை பிறந்தது.. அவர்களே போட்ட கியூட்டான பதிவு
சமீர்-அன்வர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பழைய சீரியல்கள் குறித்து கேட்டாலும் ரசிகர்கள் சட்டென கூறிவிடுவார்கள்.
அப்படி சில வருடங்களுக்கு முன்பு இளம் நடிகர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பகல் நிலவு.
700 எபிசோடு வரை இந்த தொடரில் நடித்து வந்த பிரபல சீரியல் ஜோடி அன்வர் மற்றும் சமீரா திடீரென தொடரில் இருந்து வெளியேறினார்கள்.
சீரியலில் இருந்து வெளியேறியவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான றெக்க கட்டி பறக்குது மனசு தொடரை தயாரித்து அதில் நடித்திருந்தார் சமீரா.
குழந்தை
இவர்கள் ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான சமீரா-அன்வருக்கு 2வது முறையாக குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையின் போட்டோவுடன் சமீரா தனது இன்ஸ்டாவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.