புதிய கார் வாங்கிய சீரியல் ஜோடி சித்து மற்றும் ஸ்ரேயா- கார் முன் அவர்கள் எடுத்த அழகிய புகைப்படம்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் சீரியலில் ஏற்பட்ட பழக்கத்தால் காதலர்களாக மாறினார்கள்.
பின் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த வருடம் திருமணமும் செய்துகொண்டார்கள்.
சித்து விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 தொடரில் நாயகனாக நடித்து வர ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த ரஜினி தொடர் அண்மையில் தான் தொடங்கப்பட்டது.
தற்போது இவர்களை பற்றிய ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால் இருவரும் சேர்ந்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள். தங்களது காரின் முன் எடுத்த புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.