புதிய வீடு வாங்கியுள்ள சீரியல் ஜோடி சித்து-ஸ்ரேயா... அவர்களே வெளியிட்ட போட்டோஸ்
சித்து-ஸ்ரேயா
கலர்ஸ் தமிழ், சின்னத்திரை ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி.
இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த சீரியல் மூலம் சித்து-ஸ்ரேயாவை ரசிகர்களுக்கு பிடித்து போய் கொண்டாட அவர்களுக்குள் காதலும் ஏற்பட்டது.
இதனால் காதலர்களாக இருந்தவர் நிஜ வாழ்க்கையில் இணைந்து நட்சத்திர ஜோடியாக மாறினார்கள்.
அந்த தொடருக்கு பிறகு ஸ்ரேயா ரஜினி என்ற தொடரில் நடிக்க சித்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். பின் இருவரும் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இணைந்து நடித்து வந்தார்கள்.

புதிய வீடு
சீரியலில் நடிப்பதை தாண்டி இப்போது சித்து படத்திலும் நடிக்க களமிறங்கியுள்ளார். இந்த சந்தோஷ விஷயத்தை தாண்டி சித்து-ஸ்ரேயா ஜோடி ஒரு சூப்பர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதாவது அவர்கள் முதன்முறையாக ஒரு புதிய வீடு வாங்கியுள்ளார்களாம். வீட்டின் புகைப்படங்களை போட்டு சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
