சீரியல் பிரபலங்கள் ஆர்யன்-ஸ்ருத்திகாவிற்கு குழந்தை பிறந்தது.. அவர்களே போட்ட பதிவு
பிரபலங்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நாயகனாக நடித்த திருமுருகனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஸ்ரிதிகா.
திருமுருகன் கோபி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரிதிகா மலர்க்கொடி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார்.
இந்த தொடருக்கு முன்பே கலசம், கோகுலத்தில் சீதை என பல சீரியல்களில் நடித்தாலும் நாதஸ்வரம் நடிகைக்கு பெரிய ரீச் கொடுத்தது.
படங்களில் நடித்துவந்த ஸ்திரிகா கடந்த 2019ம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்தார், பின் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்றார்.
குழந்தை
கடந்த ஆண்டு ஸ்ரிதிகா மகராசி சீரியல் மூலம் பிரபலமான எஸ்.எஸ்.ஆர். ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சில மாதங்களுக்கு முன் இவர்கள் அறிவிக்க தற்போது அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஸ்ரிதிகா இன்ஸ்டாவில் பெண் குழந்தை பிறந்த பதிவு போட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.