10ம் வகுப்பு படிக்கும் போது அப்படி நடந்தது, ஒரு மாதிரி பார்த்தார்கள்- சீரியல் நடிகை கேப்ரியல்லா சொன்ன சோக சம்பவம்
கேப்ரியல்லா
சீரியல் நடிகை கேப்ரியல்லா இவருக்கு அறிமுகமே தேவையில்லை, அந்த அளவிற்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கியவர்.
சிறுவயதில் இருந்த நடனத்தில் ஆர்வம் கொண்டவர் விஜய் டிவியின் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அதில் டைட்டிலையும் வென்றார்.
பின் 2012ம் ஆண்டு விஜய்யில் ஒளிபரப்பான 7சி என்ற சீரியலில் நடித்தார், தனுஷின் 3 உட்பட சில படங்களிலும் நடித்து வந்தார்.
இப்படியே போய்க்கொண்டிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரூ. 5 லட்ச பணத்துடன் வெளியேறினார்.
பிக்பாஸ் பிறகு ஹிட் சீரியலான ஈரமான ரோஜாவே தொடரின் 2ம் பாகத்தில் முக்கிய நாயகியாக நடித்து வந்தார் தற்போது தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது. விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நடிக்க இருக்கிறார் கேப்ரியல்லா.
சோகமான சம்பவம்
இந்த நிலையில் நடிகை கேப்ரியல்லா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் 10ம் வகுப்பு படித்த நேரத்தில் என்னிடம் போன் எல்லாம் கிடையாது.
எனது புகைப்படத்தை யாரோ மார்பிங் செய்து வெளியிட்டார்கள், அதில் இருப்பது நானே கிடையாது. புதியதாக பார்ப்பவர்களுக்கு நான் என்று தோன்றும் அளவிற்கு என்னைப்போலவே அந்த போட்டோ இருந்தது.
இதனால் 3 நாட்கள் நான் பள்ளிக்கு செல்லவில்லை, பள்ளியில் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த சமயம் நான் மிகவும் கஷ்டப்பட்டேன், அதில் இருந்து வெளியே வர எனக்கு கொஞ்ச நாட்கள் ஆனது என்று கூறியிருக்கிறார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
