சீரியலில் இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்கவே முடியாது ! - விஜய் டிவி சீரியலை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவி-யில் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியல் தைரியமான கிராமத்து பெண் மற்றும் பணக்கார ஹீரோ என்ற கதை களத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது.
இந்த சீரியல் தொடங்கியதில் இருந்த இதன் ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே கலாய்க்கும் படி அமைத்திருந்தது. அதுவே பலரிடமும் பிரபலமாக காரணமாகவும் இருந்தது எனவும் கூறலாம்.
இந்நிலையில் முத்தழகு சீரியலின் புதிய ப்ரோமோ ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஆம் ப்ரோமோவில் முத்தழகும், ஹீரோவும் கோயிலுக்கு செல்கிறார்கள். அப்போது சீரியல் வரும் பாட்டி முத்தழகு வரும் வழியில் முல்லை போட்டுவிடுகிறார். இதனால் முத்தழகு காலில் காயம் ஏற்பட்டு அவருக்கு ஹீரோ உதவுவார் என நினைத்து இதையெல்லாம் செய்கிறார்.
ஆனால், அதில் முத்தழகுக்கு பதில் ஹீரோ உடைய காலில் முள் குத்தி விடுகிறது. வழக்கமாக ஹீரோ தான் ஹீரோயினி தூக்கி கோயிலுக்குச் செல்வார். இதில் கதாநாயகி ஹீரோவை தூக்கிக்கொண்டு மலைக் கோயிலுக்கு செல்கிறார். எப்போது ரசிகர்கள் இதனை கலாய்த்து பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.