மழை வெள்ளத்தால் தண்ணீரில் மூழ்கிய சீரியல் செட்- விஜய், சன் டிவி சீரியல்களுக்கு வந்த பிரச்சனை
டிவி சீரியல்கள்
சீரியல்கள் தான் இப்போது வீட்டில் உள்ள மக்களின் முக்கிய விஷயமாக உள்ளது. அன்றாடம் மிகவும் விதவிதமான தொடர்கள் விஜய் மற்றும் சன் டிவிகளில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவியில் காலை 10 மணி ஆரம்பித்து இரவு 10 வரை ஒளிபரப்பாகும்.
விஜய்யில் காலையில் தொடர்கள் ஆரம்பித்தாலும் மாலையில் தொடர்ந்து தொடர்கள் ஒளிபரப்பாகும்.
மழை வெள்ளம்
தற்போது மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நாம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் ஏ ஆர் எஸ் கார்டனில் விஜய் மற்றும் சன் டிவி தொடர்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், இலக்கியா போன்ற தொடர்கள் அங்கு தான் எடுப்பார்களாம், ஆனால் இப்போது அங்குள்ள சீரியல் செட் வீடுகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறதாம்.
அங்கு தண்ணீர் சரியாகி பழையபடி மாற 10 நாட்களுக்கு மேல் ஆகும் என அங்குள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர்.