விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த தொடர், எப்போது, முழு விவரம்
விஜய் டிவி
விஜய் டிவி இப்போது உள்ள இளைஞர்கள் மிகவும் விரும்பும் ஒரு தொலைக்காட்சி.
சீரியல்கள் மூலம் தற்போது அவர்கள் ரீச் பெற்றாலும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தான் மக்களை வெகுவாக கவர்ந்தார்கள்.
பாடல் நிகழ்ச்சி, ஆடல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி என மக்களை எப்படியெல்லாம் என்டர்டெயின் செய்யலாமோ அப்படி செய்தார்கள்.
இப்போது சீரியல்கள் மூலமாகவும் விஜய் டிவிக்கு நல்ல ரீச் உள்ளது.
நேரம் மாற்றம்
சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 போன்ற தொடர்கள் எல்லாம் நாளுக்கு நாள் டிஆர்பியை எகிற விட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு புதிய தொடரின் நேரம் மாற்றம் குறித்து தகவல் வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைய புதுமுகங்களுடன் தொடங்கப்பட்ட நீ நான் காதல் தொடரின் நேரம் மாற்றம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மதியம் 1 மணிக்கு இந்த தொடரின் நேரம் மாற்றப்படலாம் என்கின்றனர், ஆனால் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.