விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர், முழு விவரம்
விஜய் டிவி
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வண்ணம் விஜய் தொலைக்காட்சியில் நிறைய விதவிதமான கதைக்களத்தை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி என பல தொடர்களுக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது, ஒவ்வொரு தொடருக்கான நிறைய இன்ஸ்டா பக்கமும் ரசிகர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
இப்போது விஜய் தொலைக்காட்சியின் மகாநதி தொடருக்கான பேச்சு தான் அதிகமாக உள்ளது என்றே கூறலாம்.
நேரம் மாற்றம்
வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் தொடர்கள் ஒளிபரப்பாகி வர தற்போது இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
பல வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடும் பாக்கியலட்சுமி தொடர் இனி இரவு 7 மணிக்கும், புதியதாக தொடங்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் இரவி 8.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.