முடிவுக்கு வந்த வீரா.. இன்று முதல் டைம் மாறும் Zee தமிழ் சீரியல்கள் - முழு விவரம் இதோ

By Karthick Raja Sep 21, 2026 09:17 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான Zee தமிழ் தொடர்ந்து மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கி வருகிறது.

திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வீரா சீரியல் பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகளுடன் நேற்று முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று முதல் Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் பழைய சீரியல்களின் ஒளிபரப்பு நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முடிவுக்கு வந்த வீரா.. இன்று முதல் டைம் மாறும் Zee தமிழ் சீரியல்கள் - முழு விவரம் இதோ | Serials Time Change In Zee Tamil After Veera End

அது குறித்த விபரங்களை பார்க்கலாம் வாங்க. அதாவது இதுவரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சந்தியா ராகம் சீரியல் இன்று முதல் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அதேபோல் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இன்று முதல் இரவு 9 முதல் 10 மணி வரை என ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது.

முடிவுக்கு வந்த வீரா.. இன்று முதல் டைம் மாறும் Zee தமிழ் சீரியல்கள் - முழு விவரம் இதோ | Serials Time Change In Zee Tamil After Veera End

இதன் காரணமாக இதுவரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வாகை சூடவா சீரியல் இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதிய வேளையில் 3:30 மணிக்கு வசுதா என்ற பெயரிலும் 4:30 மணிக்கு என்ன சொல்லப் போகிறாய் என்ற பெயரில் இரண்டு புதிய டப்பிங் சீரியல்களும் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US