ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த வாணி ஜெயராம்- பரபரப்பு தகவல் கூறிய பணிப்பெண்
பாடகி வாணி ஜெயராம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா என 19 மொழிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி வாணி ஜெயராம்.
இவர் தனது கணவர் இறப்பிற்கு பிறகு அவருடன் வாழ்ந்த வீட்டில் தான் இருப்பேன் என பிள்ளைகள் அழைத்தும் செல்லாமல் தனியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கு சமையல் மற்றும் மேற்படி வேலைகள் செய்ய, மலர்கொடி என்பவர் கடந்த பத்து வருடங்களாக வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
பணிப்பெண் கூறிய தகவல்
10.30 மணியளவில் மலர்கொடி வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார், திறக்கப்படவில்லை. போன் செய்து பார்த்துள்ளார், அப்போதும் எடுக்கவில்லை. உடனே அக்கம் பக்கத்திற்கு விஷயம் அறிந்து பாடகியின் சகோதரருக்கு போன் செய்துள்ளனர்.
அவரிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறந்தபோது வாணி ஜெயராம் தன்னுடைய அறையில், கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார் என கூறியுள்ளார்.
வாணி ஜெயராமின் மரணம் சந்தேகமாக உள்ளது என போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீரென நடந்துமுடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலத்தின் திருமணம்- அழகிய ஜோடியின் புகைப்படம்