முடிவுக்கு வந்த சன் டிவியின் செவ்வந்தி சீரியல்... கடைசி நாள் போட்டோஸ்
சன் டிவி சீரியல்களுக்கு பெயர் போன இந்த தொலைக்காட்சியில் தொடர்கள் முடிவதும், புத்தம் புதிய சீரியல்களும் களமிறங்குவதும் வழக்கமாக நடக்கிறது.
நடிகை திவ்யா ஸ்ரீதர் கதாநாயகியாக நடிக்க சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது செவ்வந்தி தொடர். அவருடன் வினோத், சிவன்யா பிரியங்கா, பிரேமி, அஷ்வந்த் திலக் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கணவனை இழந்த பெண் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் சவால்களை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டது.
கிளைமேக்ஸ்
கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்த நிலையில் ஜுலை 12 முடிந்துவிட்டது.
கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை கடந்து 3 வருடங்களாக திங்கள் முதல் சனிக்கிழமை ஒளிபரப்பாகி வந்தது.
சீரியல் முடிவுக்கு வர பிரபலங்கள் கடைசிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்து நடிகர்களை தாண்டி ரசிகர்களும் எமோஷ்னல் ஆகியுள்ளனர் என்றே கூறலாம்.