பிறந்த குழந்தை போட்டோவுடன் செவ்வந்தி சீரியல் நடிகை உருக்கம்.. இன்னும் பார்க்க வராத கணவர்
செவ்வந்தி
செவ்வந்தி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். அவரது கணவர் அர்னாவ்வும் சீரியல் நடிகர் தான். அவர்கள் இடையே திருமணத்திற்கு பிறகு பிரச்சனை ஏற்பட்டதாகவும், திவ்யா கர்ப்பமாக இருக்கும்போதே அவரை தாக்கிவிட்டு சென்றுவிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
திவ்யா ஸ்ரீதருக்கு சீரியல் குழுவினர் தான் வளைகாப்பும் செய்தனர். அதன் போட்டோ வீடியோவும் அப்போது வெளியாகி இருந்தது. அதன் பின் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை போட்டோ
தற்போது திவ்யா ஸ்ரீதர் தனது குழந்தை போட்டோவை வெளியிட்டு உருக்கமாக பேசி இருக்கிறார். அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிறந்த குழந்தையை கூட இன்னும் நடிகை அர்னவ் வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈகோவை விட்டுவிட்டு குழந்தையை பார்க்க செல்லுங்கள் என ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு அட்வைஸ் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா உடன் நடித்த குழந்தை இந்த டாப் ஹீரோவின் மகள் தானா