ஷாருக் கான் - அட்லீ படத்தில் எடுக்கப்படும் பிரமாண்ட ஸ்டண்ட் காட்சிகள்,வெளியான புதிய தகவல்..
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனரான அட்லீ பிளாக் பஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரையுலகில் மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் அடுத்த படத்தை அட்லீ இயக்கவுள்ளார், இப்படத்திற்கான ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது.
மேலும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு, கலை இயக்குனர் முத்துராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் அப்படத்திலும் பணியாற்றவுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காட்சிகளை Yannick Ben என்ற திறமைவாய்ந்த ஸ்டண்ட் பயிற்சியாளர், choreograph செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
