குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா கட்டிய புதிய வீடு... அவரே வெளியிட்ட போட்டோஸ் வைரல்
ஷாலின் ஷோயா
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா.
சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாளத்தில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இப்படி கலைத்துறையில் நிறைய விஷயங்கள் செய்திருந்தாலும் இவர் அதிகம் பிரபலம் ஆனது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான்.
அந்த நிகழ்ச்சியில் கடைசி வரை வருவார் என பார்த்தால் இடையிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
புதிய வீடு
எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஷோயா தற்போது ஒரு சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் லேட்டஸ்ட் பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
எல்லோருக்கும் இருக்கும் கனவு போல் ஷோயாவிற்கும் சொந்த வீடு கட்டும் ஆசை இருக்க தற்போது அது நிறைவேறியுள்ளதாக கூறி புகைப்படமும் வெளியிட்டுள்ளார்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri