ஷபானா ஆர்யன் திருமணமாகி 2 மாதம்.. போட்டோ வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
செம்பருத்தி சீரியல் ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடகர் ஆர்யன் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருட இறுதியில் தான் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் எதிர்ப்பு என்றும் அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று கூட பரபரப்பாக செய்தி பரவியது. ஆனால் அவர்கள் இந்த செய்தி பற்றி வாய்திறக்கவே இல்லை.
இந்நிலையில் தற்போது திருமணம் ஆகி இரண்டாவது மாதத்தில் ஆர்யன் ஷபானா உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு 'Happiest 2nd month My Pondati' என வாழ்த்து கூறி இருக்கிறார்.
ஷபானாவும் அதே போட்டோவை பகிர்ந்து 'You too' என பதிவிட்டு இருக்கிறார். இதனால் அவர்கள் நடுவில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை வெளிப்படையாக உலகத்திற்கு தெரிவித்து இருக்கின்றனர்.