சின்னத்திரை நடிகை ஷபானா திருமண சர்ச்சை, பெற்றோர்கள் வந்தார்களா இல்லையா? - முற்றுப்புள்ளி வைத்த தகவல்!

Shabana
By Jeeva Nov 16, 2021 11:09 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜஹான்.

இவரும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர் ஆரியனும் சமீபத்தில் யாரும் எதிர்பாராத வகையில் திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

திருமணம் ஆனது முதலே இவரக்ளின் திருமணம் குறித்த சர்ச்சை பதிவுகள் இணையத்தில் உலாவர தொடங்கியது. இதற்கு காரணம் இரண்டு பேரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பது தான்.

இருவீட்டாருக்கும் தெரியாமல் தான் ஷபானாவின் திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் காட்டுத்தீயென பரவ தொடங்கிய நிலையில் திருமணத்திற்கு ஷபானாவின் தாயார் வந்திருந்தார் என்று உறுதிப்படுத்தும் விதமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி கிடைத்துள்ளது.

  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US