அந்த விஷயத்தால் ஒரு மாதம் வீட்டிற்குள்ளேயே இருந்தேன்.. சீரியல் நடிகை ஷபானா பேட்டி
நடிகை ஷபானா
செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜகான். இதன்பின், Mr. மனைவி சீரியலில் நடித்தார். மேலும் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 6ல் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை ஷபானா சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது முதல் தமிழ் சீரியல் செம்பருத்தி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
[JHNONZL ]
அவர் கூறியதாவது:
"செம்பருத்தி சீரியலுக்கு பிறகுதான் அனைவருக்கும் என்னை தெரிந்தது. இப்பவும் செம்பருத்தி சீரியலை சொல்லி என்கிட்ட பேசுறவங்க இருக்காங்க. கிட்டத்தட்ட ஐந்து வருடம் அந்த சீரியலில் நடித்தேன். அந்த புராஜக்ட் என் வாழ்க்கையை புரட்டிபோட்டுடுச்சு".

"அந்த சீரியல் முடிஞ்சதும் அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் என்கிட்ட அந்த சமயம் ரொம்ப இருந்துச்சு. அப்போது எப்படி அந்த எமோஷனை என்னால் கையாள தெரியவில்லை. இப்போது அதெல்லாம் புரிகிறது. ஆனால், அப்போ ஒரு மாதம் வீட்டிற்குள்ளேயே இருந்தேன்" என நடிகை ஷபானா கூறியுள்ளார்.