அட்லீக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி! லைவ் வீடியோவில் ஷாருக் கான் என்ன கூறி இருக்கிறார் பாருங்க
ஷாருக் கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பதான், டுன்கி ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இன்று பதான் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் ரசிகர்கள் உடன் ஷாருக் கான் உரையாடி இருக்கிறார். அப்போது அட்லீ பற்றியும் அவர் பேசி இருக்கிறார்.
"ஜவான் வித்தியாசமான படம். அட்லீ படங்களை நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். அவர் மாஸ் படங்கள் எடுக்கக்கூடியவர். அந்த genreல் நான் படங்கள் நடித்ததில்லை, அதனால் அதை ட்ரை செய்கிறேன்."
"அட்லீக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. அட்லீ சில விஷயங்கள், நான் சில விஷயங்கள் என input போட்டு இந்த படத்தை எடுத்து வருகிறோம். த்ரில்லிங்காக இருக்கிறது" என ஷாருக் கான் தெரிவித்து இருக்கிறார்.
23 வயதில் மரணமடைந்த நடிகை ஷகீலாவின் தங்கை! விஜய் உடன் டான்ஸ் ஆடி இருக்கிறாரா.. போட்டோ இதோ

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.