விஜய்யிடம் ஷாருக் கான் வைத்த வேண்டுகோள் ! அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த விஷயம்
அட்லீ
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
அப்படியான அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ஷாருக் கானுடன் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
மேலும் சமீபத்தில் அட்லீயின் பிறந்தநாளை ஜவான் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினர். அப்போது சர்ப்ரைஸாக அந்த பார்ட்டியில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் - ஷாருக் கான்
இந்நிலையில் ஜவான் திரைப்படம் ஷாருக் கானின் தயாரிப்பு என்பதால் அப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் எண்ணத்தில் ஷாருக் கானும் இருந்துள்ளார்.
அந்த பார்ட்டியில் அவரே விஜய்யை படத்தில் நடிக்க இன்வைட் செய்ய, விஜய்யும் சம்மதித்ததாகச் சொல்லப்படுகிறது.
விஜய்யும் இப்படத்திற்கு ஒரு வாரம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம், விஜய்யின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இனிதே முடிந்தது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா-கோபியின் திருமணம்
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan