முதலிடத்தில் இருந்த ஹாலிவுட் பிரபலம் Taylor Swiftடை கீழே தள்ளி முதலிடம் பிடித்த ஷாருக்கான்... என்ன விஷயம் தெரியுமா?
ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான், பாலிவுட் சினிமாவின் பாட்ஷாவாக இருப்பவர்.
ஹிந்தி சினிமா ரசிகர்களை தாண்டி இந்திய சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் நிறைய வெற்றிப் படங்களை தயாரித்து லாபம் பார்த்துள்ளார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஆவார்.
மும்பை, அலிபாக் போன்ற நகரங்களிலும் பிரிட்டன், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர் ஷாருக்கான் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.
பணக்கார நடிகர்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரூ. 12, 490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார்.
கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டை (1.3 அமெரிக்க டாலர்) பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார் ஷாருக்கான்.