ஜெயிலர் 2ல் நடிக்க மறுத்த ஷாருக் கான்.. அவருக்கு பதிலாக இணைந்த முன்னணி நட்சத்திரம்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது. படத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக் கான் ஒரு முக்கிய கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் அதில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம்.
தற்போது ஷாருக் கிங் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த லுக் மாற்ற முடியாது என்பதால் ஜெயிலர் 2ல் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதை ரஜினியும் ஏற்றுக்கொண்டாராம்.

பவன் கல்யாண்
ஷாருக் நடிக்க வேண்டிய ரோலில் தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது நடித்திருக்கிறாராம்.
பவன் கல்யானை வைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறாராம் நெல்சன். அதனால் தெலுங்கு ரசிகர்களும் தற்போது ஜெயிலர் 2 படத்தை எதிர்பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
