தொடங்கியது அட்லீ - ஷாருக் படம்! லீக் ஆன ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
பிகில் படத்திற்கு பிறகு ஷாருக் கான் உடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தார் அட்லீ. ஆனால் அந்த படம் கடந்த பல வருடங்களாக தொடங்கப்படாமல் இருந்தது.
ஷாருக் ட்விட்
சமீபத்தில் ஷாருக் கான் விஜய்யின் பீஸ்ட் பட ட்ரைலர் பற்றி ஒரு பதிவை போட்டிருந்தார். அட்லீ உடன் சேர்த்து அந்த ட்ரைலர் பார்த்ததாக அவர் கூறினார். அதனால் அட்லீ - ஷாருக் படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியானது.
மேலும் இருவரும் ஸ்டோரி டிஸ்கஷனில் தான் இருந்திருக்கின்றனர். அதனால் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
லயன் என பெயரிப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். அவர் நேற்று மும்பை செல்வதற்காக ஏர்போர்ட் வந்த வீடியோவும் வெளியாகி இருந்தது.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
இந்நிலையில் இன்று அட்லீ படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார் ஷாருக். அவர் முகத்தை ஸ்கார்ப் வைத்து மறைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஷாருக் நடிக்கும் மற்றொரு படமான பதான் படத்தில் அவர் நீண்ட முடி வைத்து இருக்கிறார். அதே கெட்டப்பில் தான் அட்லீ படத்திலும் அவர் நடிக்கிறார்.
High quality - without watermark
— Red Chillies ka FAN (@redchilleskafan) April 7, 2022
Thanks me later … #ShahRukhKhan #srk @srk pic.twitter.com/bqpjitj8ka