வீட்டின் பெயருக்கே லட்சம் செலவு செய்யும் ஷாருக்கான் மன்னத் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் சினிமாவை அமிதாப் பச்சனுக்கு பிறகு ஆண்டு கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவரது பெயரே ஹிந்தி சினிமாவிற்கு கொண்டாட்டம் தான்.
எப்போதும் பாசிட்டீவாக பேசும் நடிகர் ஷாருக்கானுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்தது. அது என்னவென்றால் அவரது மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தினார் என்று அவரை போலீசார் கைது செய்தனர்.
பல நாட்கள் ஜெயிலில் இருந்த ஆர்யன் சமீபத்தில் தான் வெளியே வந்தார், அதுவரை ஷாருக்கான் எந்த பணியையும் செய்யவில்லை.
படப்பிடிப்பில் ஷாருக்கான்
மகன் வெளியே வந்த சில நாட்களுக்கு பிறகு ஷாருக்கான் மீண்டும் தனது படப்பிடிப்பு வேலைகளை தொடங்கிவிட்டார். பதான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஷாருக்கான் அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுக்கு நடுவில் விளம்பரங்கள் நிறைய போட்டோ ஷுட்களும் நடத்தி வருகிறார்.
மன்னத் பெயர்
இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் மன்னத் வீடு குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அண்மையில் மன்னத் என்ற பெயர் பலகையின் டிசைனை மாற்றியுள்ளார்கள்.
புதிய வடிவத்தில் மாற்றுவதற்கு மட்டும் அவர்கள் ரூ. 20 முதல் ரூ. 25 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி பெயர் பலகைக்கே லட்சத்தில் செலவு செய்யும் நடிகரின் மன்னத் வீடு எவ்வளவு மதிப்பு தெரியுமா?.
சுமார் ரூ. 200 கோடி மதிப்பு என்கின்றனர், ஷாருக்கான் இந்த மன்னத் வீட்டை ரூ. 13.13 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.