ஷாருக் கான் ஜோடியாக நயன்தாரா இடத்தில் நடிக்கப்போவது இவரா ? வெளியான சுவாரஸ்ய தகவல்!
வெற்றி பட இயக்குனர் அட்லீயின் அடுத்த பிக் ப்ராஜெக்ட்டாக, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ARR காம்போவில் அசத்தளாக அமையப்போகிறது என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு காரணம் ஷாருக் கானின் மகன் ஆர்யனின் கைது நடவடிக்கையே என நம்பப்படுகிறது.
படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவதை அடுத்து நயன்தாரா இப்படத்திலிருந்து விலகுவதாக ஒரு புறம் செய்தி வெளியாகி இருந்தது. தற்போது அவருக்கு பதில் புதிதாக அந்த இடத்தில நடிகை சமந்தா நடிக்கப்போகிறார் என இன்னொரு சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது.
ARR இசையமைப்பதாக இருந்த நிலையில் தற்போது அனிருத் கமிட் ஆகியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. எனினும் இந்த செய்திகள் எதுவும் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.