நயன்தாரா மிகப்பெரிய அழகி.. புகழ்ந்து தள்ளிய 57 வயது நடிகர்
நயன்தாரா, ஜவான்
நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கதாநாயகனகன் நடிக்கிறார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். படப்பிடிப்பு முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி இப்படம் உலகளவில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடியுள்ளார்.
புகழ்ந்து தள்ளிய 57 வயது நடிகர் ஷாருக்கான்
அப்போது பேசிய அவர் 'நயன்தாரா இனிமையானவர் மற்றும் மிகப்பெரிய அழகி. அவரோடு இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விஜய்சேதுபதி திறமையான ஒருநடிகர். அதுமட்டுமின்றி மிகவும் அடக்கமானவர். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது'.
'ஜவான் படம் பக்கா கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இயக்குனர் அட்லி இந்த படத்தில் என்னை இரண்டு விதமாக திரையில் காட்ட முயற்சி செய்துள்ளார்' என கூறியுள்ளார்..
திவ்யா ஸ்ரீதர் அப்படியெல்லாம் செய்தார்.. குழந்தையை கேட்கமாட்டேன்: அர்னாவ் அதிர்ச்சி பேட்டி

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
