5 கோடி ரூ. வாட்ச் கட்டியிருக்கும் பிரபல நடிகர்: விலையை கேட்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்
ஷாருக் கான்
இந்தியாவில் இருக்கும் பணக்கார நடிகர்களில் ஒருவர் ஷாருக் கான். உலக அளவில் பணக்கார நடிகர்களை பட்டியலிட்டால் டாப் 10ல் நிச்சயம் ஷாருக்கானும் இருப்பார். அந்த அளவுக்கு சினிமாவில் அதிகம் சம்பாதித்து அதை வைத்து பல தொழில்கள் நடத்தி வருகிறார் அவர். ஐபிஎல் டீம் ஒன்றையும் அவர் வாங்கி நடத்தி வருவது எல்லோருக்கும் தெரியும்.
சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. கேஜிஎப் 2 படத்தின் சாதனையை அசால்ட்டாக பதான் ஓவர்டேக் செய்துவிட்டது. அடுத்து பாகுபலி சாதனையையும் ஓவர்டேக் செய்து இந்தியாவில் நம்பர் 1 வசூல் படமாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ச் விலை
பல சொகுசு பங்களா, கார்கள் என சொகுசான பல விஷயங்களை வைத்திருக்கிறார் ஷாருக். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோவில் ஷாருக் அணிந்து இருந்த ப்ளூ வாட்ச் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.
அதன் விலை ₹4.98 கோடி ருபாய் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. சாதாரண மக்கள் வாழ்க்கை முழுக்க சேர்த்து வைத்தாலும் அந்த ஒரு வாட்சை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை இருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் ஆச்சர்யமுடனும் அதிர்ச்சியுடனும் பேசி வருகின்றனர்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன்.. 38 வயது நடிகையின் அதிரடி முடிவு