மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற நடிகர் ஷாருக்கான்.. வெளிவந்த முக்கிய தகவல்! என்ன தெரியுமா
ஷாருக்கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் ஷாருகான். ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த பதான், ஜவான்,டங்கி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவர். முன்பு, அகமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரின் குவாலிபயர் 1 போட்டியை நேரடியாக கண்டுகளித்தார்.
அதுமட்டுமில்லாமல் கொல்கத்தா அணியின் வீரர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சிகிச்சை
இந்தநிலையில், ஷாருக்கான் கண் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை திட்டமிட்ட படி நடக்கவில்லை என்பதால் மேல் சிகிச்சைக்காக ஷாருக்கான் அமெரிக்கா சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், எதற்காக மும்பையில் சிகிச்சை தொடரவில்லை? என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
