அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்திலிருந்து நயன்தாரா விலகல்? குழப்பத்தில் படக்குழு, என்ன காரணம்:
ராஜாராணி படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக கால்பதித்தவர் அட்லீ. முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து உச்ச நடிகர்களுடன் படம் இயக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
அதன்படி இவர் இயக்கத்தில் வெளிவந்த விஜய்யின் தெறி, மெர்சல்,பிகில் என அனைத்துமே பெரிய அளவில் ஹிட் ஆனது.
அந்த வழியில் அட்லீ தனது அடுத்த படத்துக்காக பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானுடன் கைக்கோர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் ஜோடியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கமிட் ஆகியிருந்த நிலையில் இப்பொழுது நயன்தாரா படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு நயன்தாராவின் தனிப்பட்ட காரணங்களே காரணம் எனவும் ஷூட்டிங் ஷெட்யூல் தள்ளிபோவதே காரணம் எனவும் சில தரப்பு கூறுகிறது. மற்றோரு தரப்பு ஷாருக் கானின் குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழலே காரணம் என கூறுகிறது.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri