பதான் படத்திற்கு வரும் எதிர்ப்புகள் -பதிலடி கொடுத்த ஷாருக்கான்
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஷாருக்கான். அவர் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள "பதான்" 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 25 வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார்.
வீடியோ பாடல் சர்ச்சை
இதைத்தொடர்ந்து திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
அந்த வீடியோ பாடலில் தீபிகா காவி நிறத்தில் பிகினி அணிந்து கொண்டு கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பார். இதனால் பல இந்து அமைப்புகள் பதான் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பதில் அளித்த ஷாருக்கான்
இந்நிலையில், தற்போது சிலர் ஷாருக்கானுக்கு எதிர்மறையான பரப்புரைகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், "சமூக வலைத்தளங்கில் எனக்கு எதிராக வரும் கருத்துக்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது என கூறியுள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணனுக்கும் திருமணம்?