நடிகர் ஷாருக்கான் வீட்டின் பெயர் பலகை வைரத்தில் வைக்கப்பட்டுள்ளதா?- இத்தனை லட்சமா?
நடிகர் ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நாயகனாக இருக்கும் ஒரு பிரபலம். ஷாருக்கான் என்று சொன்னாலே போதும் வட இந்திய ரசிகர்கள் அப்படி கொண்டாட்டத்திற்கு ஆளாவார்கள்.
தென்னிந்தியாவிலும் இவர் பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ளார். அதன் காரணமாகவே தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படம் பெரிய அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

வீட்டின் பெயர்
நடிகர் ஷாருக்கானுக்கு மும்பையில் மன்னத் என்ற பெயர் உள்ள மிகப்பெரிய வீடு உள்ளது அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த வீட்டின் பெயர் பலகையை ஷாருக்கானின் மனைவி புதியதாக வடிவமைத்துள்ளார்.
அதாவது மன்னத் என்ற பெயர் சுற்றி வைரக் கற்கள் பொறிக்கப்பட்டுள்ளதாம். அந்த புதிய பெயர் பலகை பக்கத்தில் நின்று கௌரிகான் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.
அந்த பெயர் பலகைக்கான செலவு மட்டும் ரூ. 35 லட்சம் என கூறப்படுகிறது.
நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது குடும்ப புகைப்படம்