இதனால் தான் நீங்க தளபதி.. விஜய் பற்றி பேசிய ஷாருக்கான்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகின்ற 11-ம் தேதி வெளியாவதால், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவரமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் ஷாருக்கானிடம் விஜய்யை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் " விஜய் ஒரு அருமையான மனிதர்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

பதான்
ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளது 'பதான்' திரைப்படம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். படத்தில் வில்லனாக ஜான் ஆபிரகாம் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் தமிழ் ட்ரைலரை விஜய் வெளியிட்டுள்ளார். மேலும் படம் வெற்றி பெற வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஷாருக்கான், "மிக்க நன்றி நண்பா.இதனால் தான் நீங்க தளபதி. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you my friend @actorvijay You are Thalapathy for this humble reason, let's meet for delicious feast soon.
— Shah Rukh Khan (@iamsrk) January 10, 2023
Mikka Nandri Nanba! Idhanala Dhaan Neenga Thalapathy koodiya viraivil oru arumaiyana virunthil santhipom.
Love you
துணிவு, வாரிசு சிறப்பு காட்சிகளுக்கு தடை! கடைசி நேர தடையால் ரசிகர்கள் ஷாக்