சினிமாவை தாண்டி மது விற்பனை மூலமும் பல கோடி சம்பாதிக்கும் ஷாருக்கான்.. செம பிஸினஸ்
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷாவாக படத்துக்கு படம் வெற்றிக்கண்டு பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான், பதான் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்தியது.
அடுத்து ஷாருக்கான் என்ன படம் நடிக்கிறார், பட தகவல் வருமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொது தகவல் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
பிசினஸ்
நடிகர் ஷாருக்கான் சினிமாவில் நடிப்பதை தாண்டி படங்கள் தயாரிப்பது, கிரிக்கெட் அணி என நிறைய தொழில்களை கவனித்து வருகிறார். தற்போது ஷாருக்கான் தனது மகனுடன் சேர்ந்து தொடங்கி இருக்கு மது விற்பனை தொழிலிலும் நன்றாக சம்பாதித்து வருகிறார்.
டியாவோல் என்ற பிராண்டில் மது வகைகளை ஷாருக்கான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு தனது மகனுடன் இணைந்து ஷாருக்கான் இந்த தொழிலை தொடங்க அவரது பிராண்ட் மதுபானங்கள் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் சர்வதேச மது போட்டி நடந்தது. இதில் ஷாருக்கான் நிறுவனத்தின் மது வகைகளும் கலந்து கொண்டன. இதில் ஷாருக்கானின் கம்பெனி மது வகைகள் 100-க்கு 95 சதவீத புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்று இருக்கிறது.
இதில் டி'யாவோல் சிங்கில் எஸ்டேட் வோட்கா ஒரு பாட்டில் ரூ.5000-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் விஸ்கி ரூ.6300 -க்கு விற்பனையாகிறது. இந்த வகை டி'யாவோல் பிரமியம் ஸ்காட்ச் விஸ்கி மகாராஷ்டிராவில் 5350-க்கும், கோவாவில் ரூ.4500-க்கும் விற்பனையாகிறதாம்.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
