ஷாருக் கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்? இத்தனை லட்சம் அபராதமா

By Parthiban.A Nov 13, 2022 10:00 AM GMT
Report

நடிகர் ஷாருக் கான் இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவர். உலகம் முழுவதும் அதிகம் ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். தற்போது ஷாருக் கான் ஒரே நேரத்தில் பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அட்லீ உடன் அவர் கூட்டணி சேர்ந்திருக்கும் ஜவான் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதில் ஷாருக் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்

இந்நிலையில் ஷாருக் கான் வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு விமானத்தில் திரும்பி வந்த போது ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டு பல மணி நேரம் கழித்து தான் விடுவிக்கப்பட்டார் என செய்தி சமீபத்தில் பரவியது. அவர் 6.83 லட்சம் ருபாய் கஸ்டம்ஸ் கட்டிய பிறகு தான் வெளியில் அனுப்பினார்கள் என தகவல் பரவியது. 

ஷாருக் கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்? இத்தனை லட்சம் அபராதமா | Shahrukh Khan Stopped At Airport Customs

உண்மை இதுதான்

ஷாருக் கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவரது பாதுகாவலர் ரவி தான் நிறுத்தப்பட்டது இருக்கிறார்.

அப்போது பையில் 2 விலையுயர்ந்த வாட்ச் மற்றும் 4 காலி வாட்ச் பெட்டிகள் இருந்திருக்கிறது. அது மட்டுமின்றி iWatch Series 8 காலி பெட்டியும் இருந்திருக்கிறது.

மொத்தமாக இந்த காலி வாட்ச் packageகளுக்கும் கஸ்டம்ஸ் செலுத்த வேண்டும் என அதிகாரி சொன்ன நிலையில், ஷாருக் அதற்கு ஒப்புக்கொண்டு 6.83 லட்சம் செலுத்திய நிலையில் பாதுகாவலர் அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார்.

18 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சுக்கு ஷாருக்கு இவ்வளவு customs duty கட்டி இருக்கிறார். 

ஷாருக் கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்? இத்தனை லட்சம் அபராதமா | Shahrukh Khan Stopped At Airport Customs

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US