படப்பிடிப்பில் மேலாடை கிழிந்தது.. 300 பேர் இருந்தார்கள்.. நடிகை ஷகீலாவிற்கு இப்படி நடந்ததா
நடிகை ஷகீலா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகீலா. இவர் 1994ஆம் ஆண்டு சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடித்த முதல் படமே அடல்ட் திரைப்படம் என்பதால், இவர் மீது அடல்ட் நடிகை எனும் முத்திரை குத்தப்பட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நடிகை ஷகீலாவிற்கு அதிக அன்பு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி உள்ளிட்ட பலரும் ஷகீலாவை மம்மி மம்மி என்று அழைத்து, ரசிகர்களும் ஷகீலா, மம்மி என அழைக்க துவங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷகீலாவுடைய அடையாளமே மாறியது.
சமீபத்தில் நடிகை ஷகீலா பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.
"நடிகை சில்க் ஸ்மிதா நடித்த படத்தில்தான் நானும் சினிமாவில் அறிமுகமானேன். அந்த சமயத்தில் எனக்கு 16 வயது தான். அப்படத்தில் வரும் ஒரு காட்சியில் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். என்னுடன் எனது தங்கையும் அப்படத்தில் நடித்திருந்தார். அவரும் என்னை தொடர்ந்து நீச்சல் குளத்தில் குதிக்கவேண்டும். எங்கள் இருவருக்குமே நீச்சல் சுத்தமாக தெரியாது".
"முதலில் நாள் நீச்சல் குளத்தில் குதித்து விட்டேன். என்னை தொடர்ந்து எனது தங்கையும் குதித்தார். அவர் குதித்தபோது என் மேல் குதித்துவிட்டார். அதன்பின், எனது தங்கை உடனடியாக மேலே வந்துவிட்டார். ஆனால், நான் உள்ளே சென்றுவிட்டேன். என்னால் மேலே வரமுடியவில்லை. மேலே வருவதற்கு என்னென்னமோ செய்தேன்".
மேலாடை கிழிந்தது
"அப்போது படப்பிடிப்பில் இருந்து ஒரு நபர் உடனடியாக நீச்சல் குளத்தில் குதித்து என்னை மேலே கொண்டு வந்தார். அந்த சமயத்தில் நான் அணிந்திருந்த பிகினி உடையின் மேலாடை கிழிந்துவிட்டது. நான் தண்ணீருக்கு மேலே வரும்போது, என்னிடம் மேலாடை இல்லை. இந்த சம்பவம் நடந்த நேரத்தில், பக்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டு இருந்தது. அதனால் படப்பிடிப்பு நடந்த இடத்தில் 300 பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே என்னை பார்த்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது".
"அப்போது திடீரென யாரோ ஒருவர் அந்த கூட்டத்திலிருந்து ஒரு துணியை தூக்கி எல் மேல் வீசினார். அதை போர்த்திக்கொண்டு நான் ரூமுக்கு உடனடியாக சென்றுவிட்டேன். அந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது" என கூறினார் நடிகை ஷகீலா.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
