அது AI இல்லை.. அந்த பெண் தான்: சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன் அந்தரங்க வீடியோ பற்றி நடிகை ஷகீலா
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ஒரு சின்ன ரோலில் நடந்து வருபவர் ஸ்ருதி நாராயணன்.
சில வாரங்களுக்கு முன்பு ஸ்ருதி நாராயணன் ஆடை இல்லாமல் வீடியோ காலில் ஒரு ஆண் உடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அது தான் இல்லை AI வீடியோ என இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் விளக்கம் கொடுத்தார் நடிகை ஸ்ருதி நாராயணன்.
அதற்குப் பிறகும் அவரது பல வீடியோக்கள் இணையத்தில் கசிந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் தவறாக பேசும் பலரும் வீடியோ வெளியிட்ட அந்த ஆணை பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை எனவும் அவர் ஆதங்கத்துடன் பேசி இருந்தார்.
ஷகீலா பேட்டி
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகை ஷகீலா பேட்டி அளித்திருக்கிறார். அந்த வீடியோவில் இருப்பது அந்த நடிகை தான், AI என சொல்லி தப்பிக்க முடியாது என அவர் கூறி இருக்கிறார்.
இவ்வளவு நடந்த பிறகும் அந்த ஆண் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு புகார் கூட போலீசில் கொடுக்கவில்லை. அவர் புகார் கொடுத்தால் தான் தவறு யார் மீது இருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியும்.
அந்த வீடியோ வெளியிட்டவனை விட கூடாது, ஆனால் இதை தெரிந்தே செய்த நடிகை மீதும் தவறு இருக்கிறது என ஷகீலா கூறி இருக்கிறார்.