நடிகை ஷகிலா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகிலா. தமிழில் நடிகையாக அறிமுகமான இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களிடையே பிரபலமானார். இந்த நிலையில், நடிகை ஷகிலா மீது தாக்குதல் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது மட்டுமின்றி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷகிலா தனது அண்ணன் மகளான ஷீத்தல் என்பவரை 6 மாத குழந்தையாக இருக்கும் போதிலிருந்து வளர்த்து வருகிறார்.
அம்மாவை மகள் தாக்கிய சம்பவம்
இந்நிலையில், நேற்று நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் கொடூரமாக தாக்கிவிட்டார் என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
ஷகிலாவிற்கும், அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் ஷீத்தல் தாய் சசி, அவரது சகோதரி ஜமீலா உள்ளிட்டோர் இணைந்து ஷகிலாவை தாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.
இதன்பின், சமதப்படுத்த சென்ற ஷகிலாவின் பெண் வழக்கறிஞர் அவரைகளையும், பலமாக தாக்கிவிட்டதாக போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாம். இதற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
