பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போகாததற்கு இதுதான் காரணம்- நடிகை ஷகீலாவின் மகள் மிலா கூறிய உண்மை
பிக்பாஸ் 5வது சீசன் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பலரும் பங்குபெற்றுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி தொடங்க போகிறது என்ற செய்தி வந்ததில் இருந்து நடிகை ஷகீலாவின் மகள் மிலா பிக்பாஸ் 5 செல்கிறார் என கூறப்பட்டது, மக்களும் அவரை பெரிய அளவில் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் கடைசி வரை அவரை காணவில்லை, எனவே மக்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தார்கள். தற்போது பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ளாதது குறித்து மிலாவே பேசியுள்ளார்.
அவர் என்ன கூறியுள்ளார் என்றால், உண்மையில் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள என்னிடம் யாரும் பேசிவில்லை, எனக்கும் சொந்த வேலைகள் நிறைய இருக்கிறது என்பதால் போகாதது குறித்து கவலை இல்லை.
பிக்பாஸ் 5வது சீசன் குறித்து யார் கேட்டாலும் எனது அம்மாவிடம் கேளுங்கள் என்று கூறிவிடுவேன் என தெரிவித்திருக்கிறார்.