குடிபோதையில் ஷகிலா அப்படி பேசுவார்.. தாக்கியது ஏன்? - வளர்ப்பு மகள் அதிர்ச்சி பேட்டி
நடிகை ஷகிலா மலையாள படங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனவர். மேலும் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சின்னத்திரையிலும் பாப்புலராக இருக்கிறார்.
அது மட்டுமின்றி அவர் நடத்தி வரும் youtube சேனலில் பல பிரபலங்களிடம் எடுக்கும் பேட்டியில் தைரியமாக கேள்விகள் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ஷகிலாவில் வளர்ப்பு மகள் ஷீத்தல் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றதாகவும், சமாதானம் பேச சென்ற வழக்கறிஞர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஷீத்தல் பேட்டி
இந்நிலையில் ஷீத்தல் அளித்த பேட்டியில் அத்தை (ஷகீலா) குடிபோதையில் தன் தாய் மற்றும் சகோதரி பற்றி மோசமாக பேசியதால் தான் சண்டை வந்தது என கூறி இருக்கிறார். குடித்துவிட்டு வந்து தினமும் தன்னை ஷகீலா அடிக்கிறார் என்றும் அவர் புகார் தெரிவித்து உள்ளார்.
அவர் என்னை அடித்ததால் தான் நான் அடித்தேன். அதன் பின் வழக்கறிஞர் வந்து எங்கள் முடியை பிடித்து கொண்டார். அதனால் தான் என் அம்மா அவரை கடித்தார் என ஷீத்தல் தெரிவித்து இருக்கிறார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தற்போது விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
