3 நாட்களில் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ
சக்தி திருமகன்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் தயாரிப்பாளராக எண்ட்ரி கொடுத்து, அதை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கினார்.
நான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். இவருடைய 25வது திரைப்படம் சக்தி திருமகன். அருவி படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கியிருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த வாரம் திரைக்கு வந்த சக்தி திருமகன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் சக்தி திருமகன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.