சக்தி திருமகன் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் இவர் நடித்தால் மினிமம் கேரண்டி என்ற இடத்திற்கு வளர்ந்து வரும் விஜய் ஆண்டனி அருவி என்ற சென்சேஷ்னல் ஹிட் கொடுத்த அருண் இயக்கத்தில் நடித்துள்ள சக்தி திருமகன் இன்று ரிலிஸாக படம் எப்படியுள்ளது, பார்ப்போம்.
கதைக்களம்
விஜய் ஆண்டனி செகரட்ரி ஆபிஸில் ஒரு சிறு வேலை கிட்டதட்ட டீ வாங்கி தருவது போன்ற வேலையிலிருந்து ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்குகிறார்.
தமிழகத்தில் கவர்மெண்ட், தமிழக அரசியல் யாருக்கு எது வேண்டுமானாலும் போன் காலிலேயே முடித்து, அதற்கான கமிஷனை எடுத்துக்கொள்கிறார். அதை வைத்து ரூ 6000 கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறார்.
ஆனால், பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது போல் மத்திய அமைச்சர் ஒருவரிடம் விஜய் ஆண்டனி காட்டிய வேலை ஒன்றால் சிக்குகிறார்.
அதை தொடர்ந்து அரசியல் சாணக்யன் என்று சொல்லப்படும் ஒருவரிடம் விஜய் ஆண்டனி சிக்க, அனைத்து தரப்பும் அவரை ரவுண்ட் கட்ட, இதிலிருந்து விஜய் ஆண்டனி எப்படி மீண்டார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் ஆண்டனி இந்த மாதிரியான அண்டர்ப்ளே செய்து தன் காரியத்தை சாதிக்கும் கேரக்டர் என்றாலே அல்வா சாப்பிடுவது போல, வழக்கம் போல் நிதாதமான நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார்.
முதல் பாதி முழுவதும் அரசியல் களம் சூடு பறக்கிறது. ஒரு மீடியட்டர் பெரிய பெரிய MP, MLA ஆல் கூட முடியாத விஷயத்தை எப்படி முடிது வைக்கிறார் என்பதை காட்டிய விதம் பிரமிப்பு. ஸ்டேட் முதல் செண்ட்ரல் வரை தங்களுக்கு வேலை நடக்க மீடியட்டர்கள் எந்த அளவிற்கு பயன்படுகிறார்கள், அவர்கள் ராஜதந்திரம் என்ன என்பதை ப்ளு ப்ரிண்ட் போட்டு அருண் காட்டியுள்ளார்.
இந்த லிங்க்கை க்ளிக் செய்து நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவுக்கு உங்கள் இரங்கலை தெரிவியுங்கள்.
அதோடு சமகாலத்தில் நாம் பார்த்த அரசியல் பிரபலங்கள், அரசியல் நிகழ்வுகள் என அனைத்தையும் காட்டியது பல காட்சிகள் நாம் கனேக்ட் செய்வது போல் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் படம் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல பாஸ்ட் கட் செய்துள்ளனர், அது சிலது இல்லை பல காட்சிகள் அரசியல் பற்றி குறிப்பாக ஆழமான அரசியல் தெரியாதவர்கள் பலருக்கும் பல காட்சிகள் புரிய வாய்ப்பில்லை.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் சிறந்த தேர்வு, மிடுக்கான தோற்றத்தில் மிரட்டியுள்ளார். படத்தின் இரண்டாம் பாதி விஜய் ஆண்டனி எல்லை மீறிய லாஜிக்கில் சூப்பர் ஹீரோ போல் ஆகிறார்.
மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருக்கும் வில்லம், அதிலும் அடுத்த ஜனாதிபதி ஆக இருப்பவரை இவர் 4 பேரை வைத்துக்கொண்டு இவர் மாஸ் ஹீரோ போல் இரண்டாம் பாதியில் செய்யும் வேலைகள் எல்லாம் அநியாய லாஜிக் மீறல்.
விஜய் ஆண்டனி ப்ளாஷ்பேக் காட்சி வாகை சந்திரசேகர் வருவது பெரியாரிசம் பற்றி பேசுவது போன்ற முற்போக்கு கருத்துக்கள் எல்லாம் சிந்திக்க வைக்கும் காட்சிகள், அதே போல் இரண்டாம் பாதி முழுவதும் வசனங்களால் தினித்து இல்லாமல் காட்சிகளால் மக்களை சிந்திக்க வைக்கும்படி இருந்திருக்க வேண்டாமா.. டெக்னிக்கலாக படம் மிக வலுவாக உள்ளது, இசை, ஒளிப்பதிவு அனைத்தும் சூப்பர்.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி
நடிகர், நடிகைகள் பங்களிப்பு
பல்ப்ஸ்
எல்லை மீறிய லாஜிக்கில் செல்லும் இரண்டாம் பாதி.
மொத்தத்தில் சக்தி திருமகன் அரசியல் ஆட்டம் கபகப என சூடு புடித்தாலும், ஏற்கனவே பார்த்து பழகிபோன காட்சிகளால் அப்படியே சூடு தனிந்துவிடுகிறது.