அஜித் நடித்து சூப்பர்ஹிட்டான படத்தில் நடித்துள்ள அஜித்தின் மச்சினிச்சி நடிகை ஷாமிலி.. புகைப்படத்துடன் இதோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார்.
இதன்பின், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித் திரைவாழ்க்கையில் மிகமுக்கியமான திரைப்படங்களில் ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
அஜித்துடன் நடித்துள்ள ஷாமிலி
ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில், மம்மூட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில், இப்படத்தில் ஐஸ்வர்யா மற்றும் தபுவின் தங்கையாக நடிகையும், நடிகர் அஜித்தின் மஞ்சினிச்சியுமான ஷாமிலி நடித்துள்ளார்.
ஷாமிலி தமிழில் வெளிவந்த அஞ்சலி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ஷாமிலி, தமிழில் விக்ரம் பிரபு நடித்து வெளியான வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..