தினமும் மது அருந்தி வாழ்க்கையை ஓட்டிய ஷங்கர் பட நடிகர் ! அவரின் தற்போதைய நிலை இது தானாம்
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர். இவரின் இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதால் தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்க சென்றுவிட்டார் ஷங்கர்.
இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாய்ஸ், இப்படத்தின் மூலம் சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், தமன் உள்ளிட்டோர் அறிமுகமாகி இருந்தனர்.
மேலும் இப்படத்தில் அறிமுகமாகி பட படவாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகர் பாய்ஸ் மணிகண்டன்.
40 வயதாகி ஆள் அடையாளம் தெரியதளவு மாறியுள்ள அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார், அதில் அவரின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது "பாய்ஸ் படத்திற்கு பின் நான் நடித்த எந்தஒரு திரைப்படமும் ஓடவில்லை, இதனால் நானே கதை எழுதி படம் இயக்க நினைத்தேன். அப்படத்தின் கதையை பரத் மற்றும் நகுலிடமும் கூறியிருந்தேன்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படத்தை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டது. நான் தற்போது வெட்டியாக வீட்டில் இருந்து வருகிறேன். கல்யாணம் செய்ய ஆசை இருந்தபோது மனதளவில் நான் அனுபவசாலியாக இல்லை என்ற எண்ணத்தால் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்.
சில வருடங்களுக்கு முன்பு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்தது, இப்போதும் எனக்கு அம்மா தான் காசு கொடுத்து வராங்க. ஆனாலும் நான் சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறேன்" என கூறியுள்ளார். மேலும் தற்போது மணிகண்டன் பிரபுதேவா நடித்து வரும் பகிரா திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
