அவர் இந்திய சினிமாவின் பெருமை.. ஷங்கர் யாரை கூறுகிறார் தெரியுமா?
ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவரது பிரம்மாண்ட படங்கள் தான். எந்திரன், அந்நியன், சிவாஜி போன்ற பல பிரம்மாண்ட படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படம் எடுத்து இருக்கிறார். இப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 10ம் தேதி கேம் சேஞ்சர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
யார் தெரியுமா
இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ராஜமவுலி கலந்து கொண்டார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர் " நாம் அனைவரும் ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து, அது உருவாகும் விதத்தை கண்டு ரசிக்கிறோம்.
அதே தரத்தில் திரைப்படங்களை உருவாக்கி இந்திய சினிமாவை ரசிக்க வைத்தவர் எஸ்.எஸ். ராஜமவுலி. அவர் இந்திய சினிமாவின் பெருமை. இவரை போன்ற ஒருவர் என் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதை நான் பெருமையாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.