துரந்தர் 2 பற்றி இயக்குனர் ஷங்கர் சொன்ன விமர்சனம்.. என்ன கூறினார் பாருங்க
நேற்று ரிலீஸ் ஆன துரந்தர் 2 படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் 240 கோடி ரூபாய் வசூல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இது மிகப்பெரிய வசூல் தான் என்றாலும் புஷ்பா 2 பட வசூலினை துரந்தர் 2 படம் தொட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Dhurandhar The Revenge படம் பார்த்த பிரபலங்கள் பலரும் அதிகம் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறாரகள்.

ஷங்கர் பதிவு
இந்நிலையில் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்போன ஷங்கர் துரந்தர் 2 படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டி தள்ளி இருக்கிறார்.
கற்பனை கதையில் நிஜ சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களை பார்க்கும் வகையில் இருப்பது வியக்கத்தக்க அனுபவம். படத்திலேயே நான் முழுமையாக மூழ்கிவிட்டேன், நீளத்தை உணரவே இல்லை.
"இந்திய சினிமாவுக்கே இது வரலாற்று தருணம்" என ஷங்கர் பதிவிட்டு இருக்கிறார்.
#Dhurandhar2 It was an astounding experience to see real incidents and characters blended so well with fiction. I was immersed throughout and couldn’t feel the length of the film. Big applause for @AdityaDharFilms ‘s bold and unpredictable use of craft , particularly…
— Shankar Shanmugham (@shankarshanmugh) March 20, 2026