இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் இல்லை.. இயக்குனர் ஷங்கர் கூறிய தகவல்
இந்தியன் 2
1996ல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் மாபெரும் வெற்றி அனைவரையும் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. வருகிற ஜூலை 14ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, மறைந்த நடிகர் விவேக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஷங்கர் பேச்சு
நேற்று இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இருக்காது. இந்தியன் 3 திரைப்படத்தில் தான் அவர் நடித்துள்ள காட்சிகள் இடம்பெறும் என கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் பேசுகையில் இயக்குனர் ஷங்கருக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் இது தன்னுடைய வாழ்க்கையில் எதிர்பார்க்காமல் நடந்த மிகப்பெரிய விஷயம் என கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
